தேசிய மரபுரிமை சின்னமாக மாறுகிறது தெமோதரை பாலம்!!
தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தை(Nine Arches Bridge) தேசிய மரபுரிமை சின்னமாக பெயரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பாலத்தை பாதுகாத்து, அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.