
பிலியந்தலை – மடபான பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் தங்கியிருந்த பங்களாதேஷை சேர்ந்த பிக்கு ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
நேற்று (12) பிற்பகல் மஹரகமவில் வைத்து சிற்றுார்ந்தில் வந்த குழுவினால் பிக்கு கடத்திச் செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பிக்கு முறைப்பாடொன்று தொடர்பில் சாட்சியமளிக்கச் சென்றிருந்த போதே சந்தேகநபர்கள் அவரது முகத்தை மூடிக் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் சந்தேகநபர்கள் பிக்குவை ஹாலி – எல பிரதேசத்தில் கைவிட்டு சென்றுள்ளனர்.
அங்கிருந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து, குறித்த பிக்கு கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.