ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கல்வி நிறுவனங்களை மார்ச் 21-ம் திகதிக்கு பிறகு திறக்க அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் புத்தாண்டு தினமான மார்ச் 21க்குப் பிறகு, 7ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவிகளை பள்ளிக்கு அனுமதிக்கும் திட்டம் இருப்பதாக அந்நாட்டின் கலாச்சாரம் மற்றும் தகவல் தொடர்புத் துறை துணை அமைச்சர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார்.
மாணவர்களிடமிருந்து மாணவிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய அவர், இந்த நடைமுறையைப் பின்பற்றுவதற்கு தேவையான விடுதிகளை ஏற்பாடு செய்வது பெரும் சவாலாக உள்ளது என்றும் கூறினார்.
