இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லப் போவதில்லை என அரசாங்க அமைச்சர்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்த போதிலும், சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் தமக்கு இரகசிய அறிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை தன்னால் வெளியிட முடியவில்லை எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பு,
