அமெரிக்காவில் வெவ்வேறு வருடத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக இரட்டை குழந்தைகள் பிறந்தால் ஒரு சில வினாடிகள் மட்டுமே மாறுபடும். ஆனால் அமெரிக்காவில் சமீபத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வருடமே மாறிபோன நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் California மாகாணத்தில் வசித்து வரும் Fatima Madrigal என்கின்ற பெண்ணுக்கு அண்மையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

அவருக்கு முதல் குழந்தை டிசம்பர் மாதம் 31ஆம் தேதி 2021 ஆண்டு இரவு 11.45 மணிக்கும், இரண்டாவது குழந்தை 2022ஆம் ஆண்டு சரியாக நள்ளிரவு 12 மணிக்கும் பிறந்துள்ளது.
சராசரியாக 15 நிமிட இடைவெளியில் இரட்டை குழந்தைகளின் வருடமே மாறியுள்ளது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து Fatima Madrigal-க்கு பிரசவம் பார்த்த மருத்துவர் இது எனது பணி காலத்தில் நான் என்றும் மறக்க முடியாத ஒரு பிரசவம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த Fatima தனது இரட்டைக்குழந்தைகள் வெவ்வெறு வருடத்தில் பிறந்திருப்பது எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் தனது ஆண் குழந்தைக்கு Alfredo என்றும், பெண் குழந்தைக்கு Aylin என்றும் பெயர் சூட்டியுள்ளளார். இந்நிலையில் அதிசிய இரட்டை குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
