13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி தமிழ் – முஸ்லிம் கட்சிகள் இன்று மூன்றாவது சந்திப்பை கொழும்பில் நடத்துகின்றன.
இந்தநிலையில் இந்த கோரிக்கை உட்பட்ட ஐந்து அம்ச விடயங்கள் தொடர்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் ஆவணம் ஒன்றில் கைச்சாத்திடுகின்றன.
இந்தநிகழ்வில் மாவை சேனாதிராஜா, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், எம்.ஏ சுமந்திரன், சி.வி விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், பழனி திகாம்பரம், என்.ஸ்ரீகாந்தா மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அத்துடன் ரிசாத் பதியுதீன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வி.ராதாகிருஸணன் ஆகியோரின் பிரதிநிதிகளும் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
