வவுனியா,கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய தகவலை அக்கமபக்கத்தினர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

அதன்படி பொலிஸார் அப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான 34 வயதுடைய பெரியசாமி நாகராஜன் என்பவரின் சடலத்தை மீட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் தடவியல் பொலிசாரோடு சேர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.