கொழும்பு மெனிங் சந்தையின் இன்றைய மரக்கறிகளின் விலை விபரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, இன்றைய தினம் மரக்கறி விலைகளில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கரட் ஒரு கிலோ 300 ரூபாவாகவும், லீக்ஸ் ஒரு கிலோ 200 ரூபாவாகவும், போஞ்சி ஒரு கிலோ 350 ரூபாவாகவும், கோவா ஒரு கிலோ 250 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா சந்தையில் உடரட மற்றும் பஹத ரட பிரதேசங்களிலும் சகல மரக்கறிகளும் , ஒரு கிலோ 450 ரூபாவுக்கு விற்பனையாவதால் நுகர்வோருக்கு மரக்கறிகளை கொள்வனவு செய்ய முடியாமல் போயுள்ளதாக நுவரெலியா வார சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.