சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் அபாய நிலை காணப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஆனந்த பாலித, எரிசக்தி அமைச்சரின் கருத்துகள் இதனை உறுதிப்படுத்துவதாக கூறினார்.
எரிபொருளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் கடன்களைப் பெற்றுக் கொள்ளத் தவறியமை காரணமாக எதிர்காலத்தில் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரு வருட காலத்துக்கு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு ஓமானிடம் இருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுவதாக எரிசக்தி அமைச்சர் கூறியிருந்தாலும் அதனை அரசாங்கம் பெற்றுக் கொள்ளப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியாவி டமிருந்து 500 மில் லியன் டொலர்களைப் பெறவுள்ளதாக அமைச்சர் கூறியிருந்தாலும் நிதியமைச்சர் இந்தியாவிட மிருந்து எரிபொருளை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை நாடு பெறாவிட்டால் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மூட வேண்டி ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.