துறை சம்பந்தமான அறிவும், புரிதலும் இருப்பவர்களை அருகில் வைத்துக்கொண்டிருந்தால், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை உருவாகி இருக்காது என இராஜாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நாட்டில் அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லாத பின்னணியில் சில அமைச்சர்கள் வெளிநாடு சென்றுள்ளமை சம்பந்தமாக தனது கடும் அதிருப்தியையும் அவர் வெளியிட்டுள்ளார்.
வெளிநாடு சென்றவர்களிடம் அந்நிய செலாவணி இருக்கலாம். நாட்டில் பால் மா, எரிவாயு, எரிபொருள், மருந்து ஆகியவற்றை கொள்வனவு செய்ய அந்நிய செலாவணி இல்லாத போதிலும் இவர்கள் வங்கிகளில் பெற்றிருக்கலாம் அல்லது அதனை தேடிக்கொள்ளும் முறை அவர்களிடம் இருந்திருக்கும்.
இது தற்போது பேசப்பட்டிருக்க வேண்டிய விடயமல்ல. அரசாங்கத்தை அமைக்கும் போது இது பற்றி பேசி இருக்கலாம். என்பது தெளிவாக தெரிகின்றது. நாங்களும் பல ஆண்டுகள் அமைச்சர்களாக பதவி வகித்திருக்கின்றோம் எனவும் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.