சீனா மட்டுமல்ல எந்தவொரு நாட்டினாலும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியான தீர்வினை வழங்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் (G.L. Peiris) தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகள் தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றும் தரும் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கனவு காணக் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
