
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3ம் திகதி இரவு 7:00 மணிக்கு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மறுநாள் தொடங்கி 4ம் திகதி வரை தினமும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பத்து நாள் திருவிழாவின் நிறைவு நாளான 13ம் திகதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, இன்றைய ராப்பத்து விழாவின் முதல் நாளான டிச. 14 அதிகாலை 3:30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபத வாயிலில் அருள்பாலித்தார். பின்னர் மாலை 4:45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஆயிரங்கால் மண்டபத்தில் ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். ராப்பத்து நிகழ்ச்சி வரும் 24ம் திகதி வரை நடக்கிறது.
19 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஆண்டு தை பிரம்மோற்சவம் ஸ்ரீரங்கத்தில் நடைபெறவுள்ளதால் கார்த்திகை மாத தொடக்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.
இதை 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்வது வழக்கம். கொரோனா கட்டுப்பாடு: கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும், அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சொர்க்கவாசல் திறக்கும் நாளில், பக்தர்கள் காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.