
பதவி நீக்கம் செய்யப்பட்ட மியான்மரின் ஜனநாயக தலைவர் ஆங்சாங் சூகி க்கு, அந்நாட்டு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இராணுவத்திற்கு எதிராக அதிருப்தியை தூண்டியதற்காகவும், கொரோனா விதிகளை மீறியதற்காகவும் ஜனநாயக தலைவர் ஆங் சான் சூகிக்கு மியான்மர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆங்சாங் சூகி ஆதரவாளர்கள் கூறும்போது, இந்த வழக்குகள் ஆதாரமற்றவை என்றும், இராணுவம் அதிகாரத்தை பலப்படுத்தும் அதே வேளையில் அவரது அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதேவேளை கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி இராணுவம் ஆங்சாங் சூகியை சிறைப்பிடித்து தடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.