வவுனியாவில் நிலவும் தொடர் மழை காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக வவுனியாவில் கனமழை பெய்து வருவதனால் தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் அதிகரித்து வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது.
இதன் காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 66 பேரும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும், வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 76 பேருமாக வவுனியா மாவட்டத்தில் 50 குடும்பங்களைச்சேர்ந்த 182 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் 4 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மேலதிக தகவல்களை சேகரித்து வருகின்றனர்.



