
எதிர்வரும் 20ஆம் திகதியில் இருந்து இரவு 10 மணிமுதல் அதிகாலை நான்கு மணிவரை இரவுநேர ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு மறு அறிவிப்புவரை தொடரும் எனவும் இதன்போது, தனியார் பொதுப்போக்குவரத்துகளுக்கு அனுமதி இல்லையெனவும் மருத்துவம் போன்ற அவசர தேவைக்கான தனியார் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்திருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதுடன் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.