சென்னையை அடுத்த செங்கல்பட்டைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியின் மகள் 20 வயதான ரட்சயா மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

பொதுவாக மாடலிங் என்பதே பொருளாதரத்தில் முன்னேற்றம் அடைந்தவர்கள், நடிகைகளால் மட்டுமே செய்ய முடியும் என்ற ஒரு மாய பிம்பம் உள்ளது. இவற்றை எல்லாம் மாற்றி மாடலிங் என்பது ஒரு பொதுவான துறை அதில் யார் வேண்டுமானாலும் சாதித்து காட்டலாம் என நிரூபித்துள்ளார் ரட்சயா.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளியான மனோகர் என்பவரின் மகளான ரட்சயாவுக்கு, சிறுவயது முதலே மாடலிங்கில் ஆர்வம் இருந்துள்ளது.

VISCOM படித்து வரும், இவர், எப்படியேனும் இந்தத் துறையில் சாதித்தே ஆக வேண்டும் என்பதற்கான அதற்காக உழைத்திருக்கிறார். தந்தையின் தினக்கூலி வருமானத்தை வைத்து மட்டும் தனது இலக்கை அடைய முடியாது என தெரிந்து கொண்டவர், கல்லூரி நேரம் போக மீதி நேரத்தில் பகுதி நேர வேலைகளையும் செய்து வருமானம் ஈட்டி வந்துள்ளார்.

அதனைக் கொண்டு தனது நடை, உடை போன்றவற்றில் கவனம் செலுத்தி திறமையை வளர்ந்துக் கொண்டுள்ளார். STAR INDIA AWARDS நடத்திய மாவட்ட அளவிலான அழகிப் போட்டியில் தேர்வாகி, பின்னர் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டார்.

சுமார் ஆயிரக்கணக்கான அழகிகள் கலந்துகொண்ட மிஸ் தமிழ்நாடு போட்டியில் ரட்சயா, ”மிஸ் தமிழ்நாடு” என்ற பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

இந்த வெற்றியின் பின்னர், எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் ரட்சயா கலந்து கொள்ளவுள்ளார்.

அதேவேளை இதற்கு முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ”மோனோ ஆக்டிங்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, அரசு சார்பில் மலேசியா அழைத்து செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal