Month: June 2023

தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் திடீர் இராஜிநாமா..!

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இந்த இரஜினாமா கடிதத்தை அவர் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பபியுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் காணிகளை…

சப்ரகமுவ ஆளுநராக நவீன் திஸாநாயக்க?

சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவிவகித்த டிக்கிரி கொப்பேகடுவ, ஆளுநர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவைக் கொண்டு நிரப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. அவருக்கான நியமனக்கடிதம் 13ஆம் திகதி ஜனாதிபதி ரணில்…

தனிப்பட்ட தகராறு காரணமாக 69 வயதுடைய ஒருவர் தெஹிவளையில் வெட்டி படுகொலை!

தெஹிவளையில் தனிப்பட்ட தகராறு காரணமாக 69 வயதுடைய ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரை வெட்டிய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார் என்றும்…

நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம்

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. பாடசாலை தவணை நாளை…

கோழி இறைச்சி, முட்டையினை குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்க புதிய சட்டம்

கோழி இறைச்சி மற்றும் முட்டையினை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்காக எதிர்காலத்தில் சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மீனின் விலை அதிகரிப்பு காரணமாக கோழி இறைச்சி வியாபாரிகள் அநாவசிய இலாபம் பெறும் நோக்கில் விலையை…

5 வருடங்களில் இறக்குமதி செய்யப்பட்ட வாகன விபரங்கள்

கடந்த 05 வருடங்களில் நாட்டிலுள்ள ஒவ்வொரு 05 பேரில் ஒருவா் வெளிநாட்டிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இவற்றில் 75% வாகனங்கள், வங்கிக் கடன் அடிப்படையில் பெறப்பட்டவை என அவர் இன்று (09) பாராளுமன்றத்தில்…

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான விவாதம் ஜூன் மாதம் 21ம் திகதி!

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான விவாதத்தை ஜூன் மாதம் 21-ஆம் திகதி நடத்த பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தலை உடன் நடாத்துமாறு சஜித் கோரிக்கை!

வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும், பணமில்லை எனக் கூறி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டாலும், சுற்றறிக்கைகள் மூலம் அரசியல் கைக்கூலிகளை நியமித்து உள்ளூராட்சி மன்றங்களை தமக்கு விருப்பமானவாறு கட்டுப்படுத்த முயற்சித்து வருவதை எதிர்க்கட்சித் தலைவர்…

தனிப்பட்ட தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ள வேண்டாம் – பொலிஸார்

சமூக ஊடகங்கள் மூலம்  பண மோசடி சம்பவங்கள் தொடர்பில் அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் தனது தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்க வேண்டாம். அவ்வாறு வழங்கும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு  பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

இன்று இரவு 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் !

களுத்துறை மாவட்டத்தில் சில இடங்களில் இன்று இரவு 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்…

SCSDO's eHEALTH

Let's Heal