Month: March 2023

இலங்கையின் கடன் திட்டத்திற்கு  உத்தரவாதமளித்தது சீனா!! 

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா உத்தரவாதம் அளித்துள்ளது. சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கியின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தகவல் வௌியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திற்கு…

ஆசிரிய மாணவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!!

 கல்வியியல் கல்லூரிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு நியமனங்களை வழங்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மிக வறுமை நிலையில் கற்றலை நிறைவு செய்த மாணவர்கள் தற்போதும் வறுமை நிலையையே…

இலங்கைக்கு உதவி செய்கிறது அமெரிக்கா!!

நேற்றைய தினம் அமெரிக்க செயலாளர் ஜேனட் யெல்லென்,  இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுடன் உரையாடியுள்ளார். இதன் போது,  இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் வேண்டுகோளுக்கு அமெரிக்கா உதவும் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இலங்கையில் அதிசய முட்டை!!

இலங்கையில் கடான பிரதேசத்தில் அதிசய முட்டை இடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாலுடன் கூடிய இந்த முட்டை பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண் விலை குறையும் சாத்தியம்!!

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் எனவும், அவற்றை மேலும் அதிகரிக்க எந்த தயாரிப்பும் இல்லை எனவும், குறைந்தபட்சம் பாண் இறாத்தல் 100 ரூபாவாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதற்கு…

இளைஞன் புத்தகப்பையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

 அல்லைப்பிட்டி பிரதான வீதியில் உள்ள ஆலமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. புத்தகப் பை முதுலில் தொங்கவிட்ட படி, குறித்த இளைஞன் தூக்கில் தொங்கியுள்ளார். உயிரிழந்தவர் பழைய பூங்காவீதி யாழ்ப்பாணம்…

ரமழான் காலத்தில் விசேட விடுமுறை!!

ரமழானில் முஸ்லிம் அரச அதிகாரிகள் தொழுகை மற்றும் சமய சடங்குகளில் ஈடுபடும் வகையில் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும்…

யாழ். மாநகர மேயருக்கான பெயர் பரிந்துரை!!

இலங்கை தமிழரசு கட்சியின் சொலமன் சிறிலை, யாழ். மாநகரசபையின் முதல்வர் வேட்பாளராக நியமிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று (05) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மாநகரசபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில், பெரும்பாலானோர் சொலமன் சிறிலின் பெயரை முன்மொழிந்துள்ளதாக…

தேர்தல் திகதி நாளை அறிவிப்பு!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு நாளை (07) அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு பணம் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அதை எப்படி நடத்துவது என்பது குறித்து நிதியமைச்சின் செயலாளர், அரசு…

அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்!!

வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று (06) அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. அதிகாலை 5.07 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ தூரத்தில் இருந்தது.…

SCSDO's eHEALTH

Let's Heal