Month: February 2023

பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் – மீட்பு பணி தீவிரம்…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் பயங்கர குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குவெட்டாவின் பொலிஸ் தலைமையகத்திற்கு அருகே இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் குறித்து எந்த தகவலும்…

உயரதரம் சித்தி அடைந்த மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

இந்த கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக வெற்றிடங்கள் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயர்தர மீள் மதிப்பீட்டு முடிவுகளின் பின்னர், பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களும் அங்கு பரிசீலிக்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத்…

விலையை அதிகரித்தது லிற்றோ எரிவாயு நிறுவனம்!!

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று(05) நள்ளிரவுடன் அதிகரிக்கப்படுகிறது. 12.5 கிலோ சிலிண்டர் 334 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. 5 கிலோ சிலிண்டர் விலை 134 ரூபாவாலும், 2.3 கிலோ 61 ரூபாவாலும் அதிகரிக்கப்படும். புதிய விலைகள் 12.5 கிலோ – 4,743/-…

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதை விளக்கும் குட்டிக்கதை!” 

குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா! நான் குருடனாக இருந்த போதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர் கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார். கிருஷ்ணர் –…

ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் சுதந்திர தின உரை!!

 சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களே, அன்பான நாட்டு மக்களே, உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களே, அன்புள்ள குழந்தைகளே, நான் இன்று நிகழ்த்தப்போவது பாரம்பரிய சுதந்திர தின உரை அல்ல. சுதந்திரம் கிடைப்பதற்கு அர்ப்பணித்த, கடுமையாக உழைத்த டி.எஸ். சேனநாயக்க உள்ளிட்ட…

கையடக்க தொலைபேசி இலக்கங்களை மாற்றாமல், வலையமைப்புகளை மாற்றிக்கொள்ளும் வசதி !!

கையடக்க தொலைபேசி இலக்கங்களை மாற்றாமல், வலையமைப்புகளை மாற்றிக்கொள்ளும்  வசதி இவ்வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படுமென இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  இதற்கான விதிமுறைகளும் வழிகாட்டுதல்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் ஹெலசிறி ரணதுங்க தெரிவித்தார்.  இதற்கான தரவுத்தளமொன்றை நான்கு கையடக்க…

பட்டக் கலைஞனுக்கு கிடைத்த கௌரவம்!!

 2020 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட  அரும் பொருட்காட்சியகத்தில் வல்வெட்டித்துறை பட்ட போட்டியில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக முதல் இடத்தை பெற்று கொண்ட  ம.பிரசாந்தின் புகைப்படத்தையும்  ஆவணப்படுத்தியிருப்பது சிறப்பிற்குரியது..  அந்த கலைஞருக்கும் ஏனைய பட்ட வடிவமைப்பாளருக்கு இது பெரும் ஊக்க சக்தியாக…

பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் மரணம்!!

 “மல்லிகை என் மன்னன் மயங்கும்” “யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது? “நான் பாடிக் கொண்டே இருப்பேன்! உன் பக்கத் துணை இருப்பேன்!  போன்ற காலத்தால் அழியாத பல அற்புதமான பாடல்களை நமக்குத் தந்த பிரபல பின்னணிப் பாடகி திருமதி.வாணி ஜெயராம் அவர்கள்…

மயக்கத்தைக் கொடுத்த சுதந்திர தின நிகழ்வு!!

 வவுனியாவில் இடம்பற்ற சுதந்திர தின நிகழ்வில் மாணவ, மாணவிகள், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 31 பேர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வில் ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேலாக குறித்த மாணவர்கள், இராணுவத்தினர்,…

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றி சுதந்திர தினம் புறக்கணிப்பு!!

 இலங்கையில் 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக கறுப்பு கொடி ஏற்றிய சம்பவம் இடம் பெற்றுள்ளது.  சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாகக் கொண்டாடுமாறு அரசியல்,…

SCSDO's eHEALTH

Let's Heal