Month: September 2022

இலங்கைக்குக் கிடைத்த அவசர கடனுதவி!!

ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு 203 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவிக் கடனாக வழங்குகிறது. ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதை உறுதிசெய்யவும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் இந்தக் கடனுதவி வழங்கப்படுகின்றது. இதற்கான ஒப்பந்தம்…

சில பொருட்களின் விலைகள் குறைப்பு!!

இன்று (09) முதல் சதொசவில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி மற்றும் உளுந்து ஆகியவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்று முதல் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் சதொச தலைவர் தெரிவித்துள்ளார்.…

எலிசபெத் மகாராணி மறைவு – இலங்கையில் தேசிய துக்க தினம்!!

நேற்றைய தினம் { 08.09. 2022} அன்று பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்குமாறு பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இந்தநிலையில் அன்றைய தினம்…

கிளிநொச்சி மகா வித்தியாலய அணி வரலாற்றுச் சாதனை!!

கிளிநொச்சி மகா வித்தியாலய அணி, வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டத்தில் வெற்றிவாகை சூடிக்கொண்டது. இந்தப் போட்டி தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இறுதியாட்டத்தில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணியை எதிர்த்து அராலி சரஸ்வதி…

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தில் கைவரிசை!!

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹேக் செய்த குற்றத்திற்காக காலியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மாணவர் இணையத்தளத்தை ஹேக் செய்து, 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் தரவுகளை மீட்டெடுத்து, தனியான இணையப் பக்கத்தில் காட்சிப்படுத்தியுள்ளதாக…

மாணவர்கள் பாடசாலை செல்வது தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

மீண்டும், பாடசாலைகளில் மாணவர்களின் புத்தகப் பைகளைப் பரிசோதிக்கும் நடைமுறை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றும் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போது, பாடசாலை மாணவர்கள் மத்தியில் நுட்பமான வழிகளில் பல்வேறு போதைப்…

பிரித்தானியா மகாராணியின் கிரீடம் யாருக்கு!!

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் காலமானார். தெ டைம்ஸ், டெய்லி மெய்ல், தெ டெய்லி டெலிகிராப், போன்ற செய்தித்தாள்கள் மகாராணியின் மரணம் குறித்து தமது இரங்கலை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளன. பிரித்தானிய மகாராணியின் மரணம் காரணமாக எமது…

மின்வெட்டு குறித்த மகிழ்ச்சியான செய்தி!!

நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ள நிலையில் மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு நிலக்கரி கிடைத்தால் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை மின்வெட்டு தேவைப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (08) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னக்க, தற்போது…

பச்சை குத்துவது தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

பச்சைக்குத்தல் கலையை முறையான பயிற்சியின்றி முன்னெடுப்பது ஆபத்தானது எனவும் இலங்கையில் பச்சைக்குத்தல் துறையில் ஈடுபடும் பெரும்பாலானோர், முறையான பயிற்சிகளில் ஈடுபடவில்லை எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. பச்சைக்குத்தலுக்காக பயன்படுத்தப்படும் சாயங்கள் தொடர்பில், முறையான ஒழுங்கு விதிகள் பின்பற்றப்படாமை, மற்றும்…

புதியவகை நெல் கண்டுபிடிப்பு!!

12 வருட ஆராய்ச்சியின் பலனாக காலி – லபுதுவ அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தினால் புதிய நெல் வகை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. மூன்றரை மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய புதிய நெல் வகையொன்றே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது. ‘எல்.டி 376’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த நெல்…

SCSDO's eHEALTH

Let's Heal