Month: February 2022

இளையராஜா குறித்து நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டுள்ள தடை உத்தரவு!!

தான் இசையமைத்த பாடல்களை தனது ஒப்பந்தத்தை மீறி நான்கு நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளதாக 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணையில் எக்கோ, அகி, யுனிசிஸ், கிரி டிரேடிங் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமையுள்ளது…

வெளிநாட்டவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய இலங்கையர்கள்!!

இலங்கை கண் நன்கொடையாளர்கள் சங்கத்திற்கு கடந்த வருடம் தானமாக வழங்கப்பட்ட கண்கள் மூலம் 3355 வெளிநாட்டவர்களுக்கு பார்வை கிடைத்துள்ளதாக அதன் சிரேஷ்ட முகாமையாளர் ஜனத் சமன் மாத்தராராச்சி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 4540 பேர் கண் தானம் சங்கத்திற்கு கண் தானம்…

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது!!

நேற்றைய தினம் இரவு அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. காரைநகர் – கோவளம் கடற்பரப்பில் குறித்த கடற்தொழிலாளர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட…

இலங்கையில் இன்றும் மின் துண்டிப்பு இடம்பெறலாம்!!

மின்முனையங்களுக்கு அவசியமான எரிபொருள் கிடைக்காவிட்டால், இன்றைய தினமும் மின்சாரத்தை துண்டிக்க வேண்டி ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. சனிக்கிழமை என்பதால், இன்று மின்சாரத்திற்கான கேள்வி குறைவாக இருக்கும் நாளென்ற போதிலும், தற்போதைய நிலைமைக்கு மத்தியில், இரவு நேரத்தில் தொடர்ச்சியாக…

வாட்ஸ்அப் இல் வந்த புதிய வசதி!!

வாட்ஸ்அப் உலகம் முழுவதும் பிரபல்யமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக விளங்கி வருகின்றது. பயனர்கள் எளிய வகையில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் அம்சம் இதில் இடம்பெற்றிருப்பதால் அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது. WhatsApp செயலியில் பயனர்கள் தங்கள் குரல்களிலேயே தகவல்களைப் பதிவு செய்து அனுப்பும்…

9 வயதுச் சிறுவன்ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!!

ஆப்கானிஸ்தானின் சாபுல் மாகாணத்தில் ஷொகாக் எனும் கிராமத்தில் 33 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹைதர் என்ற 9 வயதான சிறுவன், குறித்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டார். உடனடியாக அந்த…

பிரம்மாண்ட கப்பல் நடுக்கடலில் தீப்பற்றி எரிந்தது!!

ஆயிரக்கணக்கான சொகுசு மகிழுந்துகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஃபெலிசிட்டி ஏஸ் (Felicity Ace) என்ற மிகப்பெரிய பனாமா சரக்குக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே நேற்று திடீரென தீப்பற்றியது. இந்நிலையில், போர்த்துக்கீச கடற்படை மற்றும் விமானப்படை விரைந்து…

60 வயது கூலித் தொழிலாளி மாடலாக மாற்றம்!!

கேரள மாநிலத்தில் கூலித்தொழில் செய்துவரும் 60 வயது முதியவர் திடீரென்று மாடலாக மாறியுள்ளார். மேலும் இவருடைய புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோழிக்கோடு மாவட்டம் வெண்ணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மம்மிக்கா. அன்றாட கூலித்தொழில் செய்து…

டெல்டாக்ரொன் என்ற கலப்பின கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு!!

பிரித்தானியாவில், டெல்டாக்ரொன் என்ற கலப்பின கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்டா மற்றும் ஒமைக்ரொன் திரிபுகளின் குண இயல்புகளை வெளிப்படுத்துவதால், இந்தக் கலப்பின திரிபுக்கு டெல்டாக்ரொன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. டெல்டாக்ரொன் வைரஸ் திரிபு…

வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்லும் ‘பக்ஸ் மிர்ரர்’ நிறுவனம்!!

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் நகரத்தைச் சேர்ந்த இளைஞர் அமன் பாண்டே, கூகுள் உட்பட நிறுவனங்களின் செயலிகளில் உள்ள பிழைகளை கண்டுபிடித்து கோடிக் கணக்கில் சம்பாதித்த வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் செயலியொன்றில் பிழைகள் இருப்பதை…

SCSDO's eHEALTH

Let's Heal