நெய்தல் கரையோரம்…கவிதை!!
எழுதியவர் – தூரா.துளசிதாசன் உப்பங்கழிகளில் மணம்வீசும்உவர்நீர்மலர் மலர்ந்திருக்கும்இராப்பொழுது வேளையில்வெண் சங்குகள்விளரியாழ் மீட்டிடஅலைமகள் இனிதாய்செவ்வழிப் பண்ணை பாடிட…கலங்கரைவிளக்கின் ஒளிக்கைஅசைவின் திசையில்மிதந்திடும் நாவாயில்நித்திலம் தேடிநீர்க்காக்கை யொன்றுபயணமானது ..தலைவி அவளின்பெருவருத்தம் நீங்கிடபெருமகிழ்ச்சி வீடெங்களிலும்நிறைந்து விடவஞ்சிரமும் கானாங்கெளுத்தியும் நிரம்பிடவருவேனென்று சூளுரைத்துநளிநீரில் பயணமானான்துறைவ னொருவன் ..உரவுக் கடலோரம்நுளைச்சி யொருத்திஉழந்த…