Month: May 2021

இலங்கையின் சில பகுதிகளில் கனமழை!

இன்று (வெள்ளிக்கிழமை), சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பிரித்தானியாவில் ஒரே நாளில் 2,657பேர் பாதிப்பு- 11பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் பிரித்தானியாவில் இரண்டாயிரத்து 657பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 44இலட்சத்து 44ஆயிரத்து 631பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

வியக்கவைக்கும் வாழை இலை!!

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை. ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும். மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் என்பதும் காரணமாகும். வாழைக் குலை எடுக்கலாம், வாழைப் பொத்தி எடுக்கலாம்…

வைணவ வாழ்வு நெறிகள்!!

பா. காருண்யா வைணவத்தைப் பின்பற்றுபவர்கள், பஞ்ச ஸம்ஸ்காரம் எனும் செயல்பாடுகளை அறிந்து அதன்படி வாழ வேண்டும் என்று வைணவ நெறிமுறைகள் சொல்கின்றன. பஞ்ச ஸம்ஸ்காரம் என்பது ஐந்து ஸம்ஸ்காரங்களை உள்ளடக்கியது. தாபம், புண்ட்ரம், நாமம், மந்த்ரம் மற்றும் யாகம். தாப ஸம்ஸ்காரம்…

ராதே திரைப்படம் ஓடிடியில் வெளியீடு!

பொலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ராதே திரைப்படத்தின் வெளியீடு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாவுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த திரைப்படத்தில் சல்மான் கான், திஷா பதானி, ஜாக்கி ஷெராப், ரன்தீப் ஹுடா போன்றோர்…

இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த திரைப்படம்!!

இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த திரைப்படத்தில் முன்னணி நடிகரான பிரபாஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபதில் சுதா கொங்கரா பிரபாஸிடம் கதை ஒன்றை கூறியுள்ளதாகவும், அந்த கதை பிரபாஸுக்கு பிடித்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுதா கொங்கரா…

ஒன்றாரியோ அரசு தடுப்பூசி போட மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்கிறது!

ஒன்றாரியோவின் சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட், ஒன்றாரியோ அரசாங்கம் தடுப்பூசி போட மாணவர்களை ஊக்குவிப்பதாகவும் , பல இளைஞர்களுக்கு தடுப்பூசி போட வேண்டுமா, வேண்டாமா என்று பெற்றோரின் ஒப்புதல் தேவைப்படும். பெற்றோர் தங்கள் மகன் அல்லது மகளுக்கு தடுப்பூசி போட விரும்பவில்லை…

இளவரசர் பிலிப்பின் நினைவாக நான்கு புதிய முத்திரைகளின் தொகுப்பு வெளியீடு!

ரோயல் மெயிலால் மறைந்த எடின்பர்க் இளவரசர் பிலிப்பின் நினைவாக நான்கு புதிய முத்திரைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டன. கருப்பு மற்றும் வெள்ளை வடிவமைப்புகள் கொண்ட முத்திரைகளாகவும் கடந்த மாதம் 99 வயதில் இறந்த இளவரசர் பிலிப்பை அவரது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களையும் இந்த…

இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு விரைவில்!!

இலங்கையில் விரைவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்காக மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதான இரண்டு சமையல் எரிவாயு நிறுவனமான லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்களின் இருப்புக்களிலும் தற்போது சிலிண்டர்களின் எண்ணிக்கைகுறைந்து வருகின்றன. ஆரம்பத்தில் அந்த நிறுவனங்கள் கோரிய 650 ரூபா விலை…

SCSDO's eHEALTH

Let's Heal