Month: April 2021

வடக்கில் 12 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை,யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 660 பேரின் மாதிரிகள் புதன்கிழமை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 13 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி…

கொவிட் -19 – கனடாவில் 12இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 12இலட்சத்து இரண்டாயிரத்து 737பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 24ஆயிரத்து 117பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில்…

இந்தியாவுக்கு 10 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ள கனடா!

கனடா, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பேரிழப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தியாவிற்கு, 10 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ‘தற்போது இந்திய மக்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். அம்புலன்ஸ் முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை…

மோடிக்கு இலங்கை ஜனாதிபதி கடிதம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உங்களது திறமையான தலைமையின் கீழும் அர்ப்பணிப்புள்ள நிபுணர்களின் உறுதியான ஆதரவோடும் இந்தியா விரைவில் நோய்க்கிருமியின் தற்போதைய அழிவைத் தடுக்கும் என்று நான் நம்புகிறேன் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுநோயின் தற்போதைய அழிவை…

இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு!!

பொதுமக்கள் அத்தியாவசியப்பொருட்களை கொள்வனவு செய்து வைத்திருக்குமாறும் அதிகளவு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படும்பகுதிகள் முடக்கப்படலாம் எனவும் , இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் நாட்களில் கண்டுபிடிக்கப்படவுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையே இதனை தீர்மானிக்கும் எனவும் இராணுவதளபதி கூறியுள்ளார். நாங்கள் மக்களை மிரட்டவேண்டிய அவசியமோ அல்லது…

ஐரோப்பிய ஒன்றியம், அஸ்ட்ராஸெனெகா நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை!

ஐரோப்பிய ஒன்றியம், கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மதிக்க தவறியதாகக் கூறப்படும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராசெனெகாவுக்கு எதிராக, சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. பிரித்தானியா- சுவீடன் நிறுவனத்தின் தடுப்பூசியான அஸ்ட்ராசெனெகா, ஐரோப்பாவில் வெகுவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஏனெனில் இது ஃபைசர்- பயோஎன்டெக் மற்றும்…

பிரித்தானியாவில் கொரோனா தொற்று உயர்வு!!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 44 இலட்சத்து 09 ஆயிரத்து 631 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா ஏழாவது இடத்தில் நீடிக்கின்றது. ஒரே நாளில் 02 ஆயிரத்து 685 பேருக்கு தொற்று…

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனிற்கு கொரோனா!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘ கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 6 பேருக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

2019 ஜனவரியில் வனாதவில்லு பகுதியில் வெடிபொருட்களை சேகரித்த மற்றும் குறித்த பகுதியை பராமரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார். பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத நிதிச் சட்டத்தின் கீழ் இன்று (புதன்கிழமை)…

மேலும் 988 பேருக்கு கொரோனா தொற்று!!

நாட்டில் மேலும் 988 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 104,475 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 95,083 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8…

SCSDO's eHEALTH

Let's Heal