Month: March 2021

ஆசை – கவிதை!!

இறுதி ஆசையைநிறைவேற்றிக் கொள்ள முடியாமல்வெளியேறி விட்டான் அவன்மலையேறிய பின்இறங்கிக் கொண்டிருந்த வெயிலில்திருவிழாக்கள் உதிக்கத் துவங்கினவைத்த வெடிகளில்வீடுகள் இடம் பெயரத் துவங்கினநிறைமாத பசு ஒன்றுகன்றை ஈன்று விட்டு ஓடிவிட்டதுபாடையின் மீது சிலர்படுத்துப் பார்த்துக் கொண்டனர்.அந்தப் புகைப்படங்களைவீட்டின் முன்சுவரில் தொங்கவிட்டபடிதலைசீவி அழகு பார்த்தபோதுநிறைவேறாத ஆசையுடன்…

அமைச்சர் ஹெகலியவின் யாழ் வருகை!!

ஊடக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ஹெகலிய ரம்புக்வெல நாளை வியாழக்கிழமை(18) யாழ். குடாநாட்டுக்கு வருகை தரவுள்ளார். இரண்டுநாள் பயணமாக இவர் யாழ் வருவதாக கூறப்படுகின்றது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல்!!

பிணை முறி மோசடி தொடர்பாகவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய மத்திய வங்கி மோசடி குறித்து விசாரணை செய்ய இரு நீதிமன்ற தீர்ப்பாயங்கள் கடந்த மாதம் நியமிக்கப்பட்டன. அதன்படி, மேல் நீதிமன்ற…

கீதை காட்டும் பாதை!

இந்துக்களின் வேத நூலாகச் சொல்லப்படுவது பகவத் கீதை. மகாபாரதத்தில் நடந்த குருஷேத்திரப் போர் தொடங்குவதற்கு முன்பாக அங்கிருந்தோரை ஒரு முறை பார்வையிட்ட அர்ஜூனன், அங்கு தன் உறவினர்கள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் இருப்பதைக் கண்டு போரிட மறுத்தார். அதனைக் கண்ட தேரோட்டியாக…

பொலிசாரைக்கண்டித்து கிளிநொச்சி வட்டக்கச்சியில் கதவடைப்பு!!

வட்டக்கச்சி பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த அருளம்பலம் துஷ்யந்தன் என்பவரின் மரணத்திற்கு நீதி கோரியும் பொலிஸாரின் தாக்குதலைக் கண்டித்தும்பொதுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களை மூடி மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி தொடர்பில் இஸ்ரேல் ஆய்வாளர்கள் கூறியுள்ள கருத்து!!

கொரோனா தடுப்பூசியை கர்ப்பிணிப்பெண்கள் போட்டுக்கொள்வது அவர்களின் கருவில் இருக்கும் குழந்தைகளைப் பாதுகாக்கும் என இஸ்ரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட கர்ப்பிணிப்பெண்களைச் சோதனைக்கு உட்படுத்திய பின்னரே இஸ்ரேல் ஆய்வாளர்கள் அண்மைய முடிவை வெளியிட்டனர். இந்தநிலையில் தடுப்பூசி கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்த Pfizer-BioNTech…

அட்லாண்டாவில் மசாஜ் நிலையங்களில் துப்பாக்கிச்சூடு!!

ஜோர்ஜியாவின் அட்லாண்டா பகுதியில் உள்ள மூன்று மசாஜ் நிலையங்களில் துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் போது 8பேர் கொல்லப்பட்டதாகத் தெரியவருகின்றது. துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தில்  21 வயதுடைய ரொபர்ட் ஆரோன் லாங் என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்தக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நீதி கோரலுக்கான இப்போராட்டத்தில், தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு, போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கழலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை வரும் இந்திய நீச்சல் பெண்!!

ஐதராபாத்தை சேர்ந்த சியாமளாஹோலி (வயது 48) என்ற பெண் தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி இடையே சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடல் பகுதியை நீந்துவதற்காக ராமேசுவரம் வந்துள்ளார். வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் ராமேசுவரத்திலிருந்து இலங்கை தலைமன்னார் செல்லவுள்ள…

வாழைச்சேனை பகுதியில் ஆற்றிலிருந்து சடலம் மீட்பு!!

வாழைச்சேனை, ஓட்டமாவடி பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தோணியில் சென்ற ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மரணமடைந்த நபர் ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சேகு இஸ்மாயில் சப்ராஸ் (மீனி) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக…

SCSDO's eHEALTH

Let's Heal