
ஹரியாணா மாநில சுகாதாரத்துறை, 927 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஹரியாணாவில் இதுவரை மொத்தமாக 927 பேர் கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 734 பேர் இன்னும் நோய் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதேநேரம் 31 பேர் உயிரிழந்துள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.