லண்டனில் மிகவும் கடினமாக உழைத்து வெள்ளவத்தைப் பகுதியில் 3 கோடி ரூபாவுக்கு தொடர்மாடியில் வீடு ஒன்றை வாங்கியிருந்தார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 30 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர்.

லண்டனுக்கு சென்ற குறித்த யாழ் இளைஞன் நிரந்தர விசா பெற்று அண்மையிலேயே திருமணம் முடித்திருந்தர்.

தான் திருமணம் முடிப்பதற்கு முன்னர் லண்டனில் உழைத்த பணத்திலும் அங்கு பெற்ற கடனிலும் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியிருந்தார்.

இவர் திருமணம் முடித்த பின்னர் அந்த வீட்டின் ‘அற்றோனிக் பவர்‘ எனப்படும் ஆட்சி அதிகாரத்தை தனது தந்தைக்கு கொடுத்திருந்தார். தந்தை ஓய்வு பெற்ற ஒரு அரச அதிகாரியாவார்.

இந் நிலையில் குறித்த வெள்ளவத்தை வீட்டில் குடும்பஸ்தரின் தந்தையான 63 வயது நபர் வாடகைக்கு ஒரு குடும்பத்தை இருத்தியுள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் மருந்தாளராகக் கடமையாற்றும் 35 வயதான ஒருவருக்கே அந்த வீட்டை வாடகைக்கு கொடுத்திருந்தார்.

குறித்த பெண்ணின் கணவர் வர்த்தக நடவடிக்கைக்காக 2017ம் ஆண்டு மலேசியா போன பின் காணாமல் போனதாக தெரியவருகின்றது.

இந் நிலையில் அந்த வீட்டில் ஒரு அறையை வீட்டின் உரிமையாளர் தனக்காக வைத்துக் கொண்டு மிகுதி இரு அறைகள் மற்றும் ஏனைய பகுதிகளையே குறித்த பெண்ணுக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.

மனைவியுடன் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த குறித்த குடும்பஸ்தரிற்கு 3 பிள்ளைகள் என்றும் அவர்களில் மூத்த மகனே திருமணம் முடித்து லண்டனில் வாழ்வதாகவும் ஏனைய இரு மகன்களும் திருமணம் முடிக்காத நிலையில் யாழ்ப்பாணத்தில் அரச உத்தியோகத்தில் உள்ளதாகவும் தெரியவருகின்றது.

வருட தொடக்கத்தில் மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடனும் கடுமையாக முரண்பட்டுக் காரணமாக கொழும்பில் குறித்த பெண்ணுன் சேர்ந்து வீட்டில் தங்கியிருந்துள்ளார் வீட்டின் உரிமையாளர்.

இதனால் கடும் கோபமுற்ற மனைவி மற்றும் பிள்ளைகள் குடும்பஸ்தரை தம்முடன் வருமாறு அழைத்த போதும் அவர் வராது அங்கேயே தங்கியிருந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இந் நிலையில் மூத்தமகனுக்கு தகவல் தெரிவித்து குறித்த வீட்டில் வாழும் பெண்ணை வீட்டை விட்டு எழும்புமாறு லண்டனில் உள்ள மகனால் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல் கொடுத்து 3 மாதங்கள் கழிந்த நிலையிலும் குறித்த பெண் வீட்டை எழும்பாததால் சட்டநடவடிக்கை எடுக்க முற்பட்ட போது பெண்ணால் தனக்கு சொந்தமாக அந்த வீட்டை வீட்டின் உரிமை வழங்கி இருந்த குடும்பஸ்தர் எழுதித் தந்துள்ளதாக குறிப்பிட்டு உறுதிப் பத்திரத்தையும் கொடுத்துள்ளார்.

இதனையறிந்து கடும் அதிர்ச்சியடைந்துள்ள லண்டனில் உள்ள மகன் குடும்பத்தினர் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைக்கு இறங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal