தமிழ்நாட்டின், சேலத்தை சேர்ந்த நடராஜன் கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்ற போது அறிமுக வீரராக களம் இறங்கி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆஸ்திரேலிய அணியை தோற்கடிக்க முக்கிய காரணமாகவும் சிறந்த பவுலராகவும் உருவெடுத்துள்ள நடராஜனை ‘யார்க்கர் கிங்’ என்று ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர்.
இதையடுத்து, 2018 ஜூன் மாதம் பவித்ராவைத் திருமணம் செய்தார் நடராஜன். இந்நிலையில் நடராஜன் – பவித்ரா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மனைவி குழந்தை புகைப்படத்தை பதிவிட்டு வரும் நடராஜன், தற்போது அழகான புன்னைகை சிரிப்பில் மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலான நிலையில், பலரும் குழ்ந்தையின் மழலை சிர்ப்பிற்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.