பிரித்தானிய மகாராணியாரின் பாதுகாப்பு கருதி, அவர் தங்கியிருக்கும் விண்ட்சர் மாளிகையிலிருந்து 2,500 அடி தொலைவுக்குள் ட்ரோன்களோ, விமானங்களோ பறக்க, தடை விதிக்கப்பட உள்ளது.
ஜனவரி 27 முதல், மகாராணியார் வாழும் விண்ட்சர் மாளிகையிலிருந்து 2,500 அடி தொலைவுக்குள் ட்ரோன்களோ, விமானங்களோ நுழையக்கூடாது.
எச்சரிக்கையை மீறி 2,500 அடிக்கு தாழ்வாக பறக்கும் விமானங்களை அகற்ற போர் விமானங்கள் அனுப்பப்படும். ட்ரோன்கள் பொலிசாரால் தடுத்து நிறுத்தப்படும்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று, அம்பெய்யும் கருவி ஒன்றுடன் மர்ம நபர் ஒருவர் விண்ட்சர் மாளிகைப் பகுதியில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மகாராணியாரின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.


