Typical and traditional Sri Lanka dish of boiled rice, curry of fish and vegetables.

உள்நாட்டு திரவ பெற்றோலியம் (LP) எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாளை முதல் 80 சதவீதத்திற்கும் அதிகமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் (AICOA) தலைவர் அசேல சம்பத் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மரக்கறி விலை அதிகரிப்புக்கு மேலதிகமாக சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு பிரதான பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தங்கள் சேவைகளை தொடர முடியாத நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக மரக்கறி மதிய உணவு பொட்டலங்களின் விலை 180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அச் சங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal