திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட நூற்றுக்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கட்டான சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொச்சிக்கடையில் உள்ள பிரபல விருந்து மண்டபத்தில் கடந்த 18ஆம் திகதி குறித்த திருமணம் நடைபெற்றுள்ளது.
இதேவேளை, Covid19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டவர்களின் தகவல்களுக்கு அமைய, குறித்த திருமண விருந்தில் மதுபானம் அருந்தி விட்டு நடனமாடியவர்களே அடுத்த நாள் தொற்றாளர்களாக முதலில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளில் 30 பேர் இதுவரை தங்கள் வீடுகளை மூடிவிட்டு சுகாதார அதிகாரிகளைத் தவிர்த்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட கட்டான பிரதேசத்தில் வசிப்பவர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனைய தொற்றாளர்கள் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
