சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடியான ஆர்யன் மற்றும் ஷபானா இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல ரிவியில் பாக்யலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யனுக்கும், மற்றொரு ரிவியில் செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஷபானாவிற்கு கடந்த நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திருமணம் நடைபெற்றது.
இவர்களின் திருமணத்தில் இருவீட்டார்களும் கலந்து கொண்டனரா என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், ஆர்யனுடன் நட்பில் இருந்த பூவே பூச்சூடவா சீரியலில் நடித்த நடிகை ரேஷ்மா தான் இந்த திருமணத்திற்கு முழு காரணமாம்.
திருமணம் முடிந்த சில நாட்களில் நடிகை ஷபானா வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாக பரவியது. அந்த பதிவில், நாம் எல்லோருமே சில வலிகளை அனுவித்து தான் வந்திருப்போம்.
பலருக்கும் பலவிதமான பிரச்னை இருக்கும். சிலர் பிரியமான ஒருத்தரை இழந்திருக்கலாம் என்று கூறியிருந்தார். இதனை அவதானித்த ரசிகர்கள் திருமணமான சில நாட்களில் என்ன பிரச்சினை என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் அவரசம் அவசரமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தினை ஆர்யன் வீட்டில் ஏற்கொள்ளவில்லை எ்னறும், திருமணமாகி ஒரு மாதம் ஆகிய நிலையில் ஷபானா இன்னும் ஆர்யன் வீட்டிற்கு செல்லவில்லை என்று கூறப்படுகின்றது.
அதுமட்டுமின்றி தேனிலவிற்காக 4 நாள் கொண்டாட நினைத்து பாண்டிச்சேரி சென்ற இந்த தம்பதிகள், ஒரே நாளில் திரும்பி வந்துள்ளனர். இதற்கும் என்ன காரணம் என்று தெரியாத நிலையில், இருவருக்கும் இடையே மனக்கசப்பு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் ஆர்யன் குடும்பத்தினர், ஆர்யனை விட்டு நீயா விலகிடு என்று கூறும் வகையில் மிரட்டல் விடுத்ததாகவும், திருமணத்தினை முன் நின்று நடத்திவைத்த நடிகை ரேஷ்மாவின் வீட்டிற்கு ஆர்யன் குடும்பத்தினர் சண்டையிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திருமணம் முடிந்து ஒரு மாதம் முழுவதாக முடியாத நிலையில், ஆர்யன் –ஷபானா குறித்து அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
