பிரித்தானியா முழுவதும் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60% வரையில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், லண்டனில் ஓமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 78,610 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பிரித்தானியாவின் முதன்மை மருத்துவ அதிகாரி முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் இதே நிலை தொடரவே அதிக வாய்ப்பு எனவும், இதுவரையான பாதிப்பு எண்ணிக்கையில் இதுவே உச்சம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாட்களுக்கு ஒருமுறை பாதிப்பு என்ணிக்கை இரட்டிப்பாக்கும் ஓமிக்ரான் தொற்று தற்போது லண்டனில் அதிகமாக காணப்படுவதாகவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

பிரித்தானியாவில் அதிக தொற்றாளர்களை அடையாளம் காணப்பட்ட 5 இடங்கள் லண்டனில் அமைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கொரோனா பரவல் தொடர்பில் அடையாளம் காணப்பட்ட பிரித்தானியாவின் 377 பகுதிகளில் 226 பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
149 இடங்களில் பாதிப்பு குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. ஆனால் லண்டனில் பாதிப்பு எண்ணிக்கை கடுமளவும் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதே நிலை நீடிக்கும் எனில், எதிர்வரும் வாரங்களில் கடுமையான முடிவுகளை முன்னெடுக்கும் ஆபத்தும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.