சென்னை சர்வதேச விமான நிலைய பயணிகள் காத்திருப்பு பகுதியில் உள்ள இருக்கைகளில் நாய்கள் படுத்துறங்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நாய்கள் படுத்துறங்கும் படத்தை ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் பல நாட்டினரும் வந்துசெல்லும் ஒரு சர்வதேச விமான நிலையத்தில், இதுபோன்ற காட்சிகள், நமது நாட்டிற்கு அவப்பெயரை தேடித்தரும் என்பதை விமான நிலைய அதிகாரிகள் உணரவில்லையா என்றும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பட்டுள்ளது.
அத்துடன் இது போன்ற பராமரிப்பின்மையால், தமிழகத்திற்கு அவப்பெயரே மிஞ்சும் என்பது அதிகாரிகள் உணர்வதெப்போது என்றும் சமூக வலைத்தளத்தில் கண்டனம் வலுத்து வருகிறது.
இதேவேளை சா்வதேச அளவில் 2021ஆம் ஆண்டில் விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்படுவது பற்றிய கணக்கெடுப்பில், முதல் 20 விமான நிலையங்களின் பட்டியலில் சென்னை விமான நிலையம் 8 வது இடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
