சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 563வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பண்டுக பெரேராவின் இறுதிச் சடங்கு இடம்பெற்ற போதே இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு ஜெனரல் சவேந்திர சில்வா மரியாதை செலுத்தியதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரிகேடியர் பண்டுக பெரேரா முல்லேரியாவில் உள்ள தொற்று நோய் வைத்தியசாலையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.
அவரது இறுதிக்கிரியைகள் நேற்று முன்தினம் எல்தெனிய மயானத்தில் இராணுவ மரியாதை மற்றும் அவரது நெருங்கிய இராணுவ சகாக்கள், குடும்ப உறுப்பினர்களின் ஒன்று கூடலுக்கு மத்தியில் இடம்பெற்றது.