தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் நடிகை காஜல் அகர்வால். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மேலும் காஜல் அகர்வால் கடந்த 2020 அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த காஜல் அகர்வால், சமீபத்தில் தான் ஒப்பந்தமாகியிருந்த படங்களில் இருந்து விலகி வந்தார்.
அதன்படி அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் ஒப்பந்தமாகி இருந்த திரைப்படங்களில் விலகியாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது காஜல் அகர்வாலின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி அவர் கர்பமாக உள்ளாரா என அனைவரிடமும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மேலும் காஜல் அகர்வால் மற்றும் கவுதம் கிச்சலு தம்பதி இன்னும் தங்களின் முதல் குழந்தை குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
