
‘கஞ்சிபானி இம்ரான்“ எனும் முகமது நஜீம் முகமது இம்ரான் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் நுழைந்ததாக ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 25 ஆம் திகதி ராமேஸ்வரம் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் கஞ்சிபானி இம்ரானும் அவரது சகாவும் இறங்கியதாகவும், இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறு மாநிலம் முழுவதும் உள்ள சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளை உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கஞ்சிபானி இம்ரான் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றது குறித்து இலங்கை இன்னும் குறிப்பிட்ட பதிலை அளிக்கவில்லை என்றும், இந்திய புலனாய்வு அமைப்புகள் கஞ்சிபானி இம்ரான் தங்கள் நாட்டுக்குள் நுழைந்தமை குறித்த உண்மைகளை நம்பகமான ஆதாரங்கள் மூலம் உறுதி செய்துள்ளதாகவும் குறித்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.