இலங்கையில் பெரும் பஞ்சம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக கனேடிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழ்ந்து வரும் கனேடிய மக்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமைகள் குறித்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இலங்கையின் பொருளாதார நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதாக கனேடிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, உணவு, மருந்து வகைகள் மற்றும் எரிபொருள் போன்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி நிலைமை, சுகாதார சேவை உள்ளிட்ட அடிப்படை சேவைகளை வழங்குவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உணவு, குடிநீர் மற்றும் எரிபொருட்கள் போன்றவற்றை களஞ்சியப்படுத்தி வைத்துக் கொள்ளுமாறு இலங்கை வாழ் கனேடியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க நேரிடலாம் என மேலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து உள்நாட்டு ஊடகங்களின் தகவல்களை உன்னிப்பாக அவதானித்து நடவடிக்கை எடுக்குமாறு கனேடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.