இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு அரசாங்கம் ஓமிக்ரோன் கட்டுப்படுத்தவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் ஓமிக்ரோன் வேகமாக பரவுகின்றது. மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களால் தொழில்புரியவோ அல்லது பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கவோ முடியாது.
பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியை சந்திப்பதை தடுப்பதற்காக அரசாங்கம் ஓமிக்ரோனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். சுகாதார பணியாளர்கள் கொரோனா வைரஸுனை கட்டுப்படுத்துவதற்காக கடுமையாக பாடுபட்டனர்.
இருப்பினும் ஐரோப்பா Omicron என்ன பாடுபடுகின்றது என்பதை நாங்கள் பார்க்கவேண்டும். ஐரோப்பாவில் 50 வீதமானவர்கள் ஓமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் தொழில்புரிய முடியாத நிலை காணப்படுகின்றது.
Omicron தொற்று வேகமாக பரவக்கூடியது. ஆனால் உயிரிழப்புகள் குறைவு. ஒருவர் பாதிக்கப்பட்டால் அவரால் வேலைக்கு செல்ல முடியாது இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படும்.

புதிய வைரஸ் திரிபு குறித்தும் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களிற்கு அரசாங்கம் அறிவிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.