அரசின் கொள்கை அடங்கிய அரச தலைவரின் சிம்மாசன உரை சம்பந்தமாக இரண்டு நாள் விவாதம் ஒன்றை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதாம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கையை விளக்கும் அரச தலைவரின் சிம்மாசன உரை எதிர்வரும் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
அரநச தலைவரின் இந்த உரை சம்பந்தமாக 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை வழங்குமாறு கிரியெல்ல, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டத் தொடர் அரச தலைவர் தலைமையில் எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாக உள்ளது.
இதன் போது அரச தலைவர் அரசாங்கத்தின் அடுத்த நடவடிக்கைகள் உட்பட அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பான சிம்மாசன உரையை நிகழ்த்தவுள்ளார்.
