அமரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிச்செய்யப்பட்டுள்ளது.
பைடனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவரான அமரிக்க வெள்ளை மாளிகையின் பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை அண்மையில் கண்டறியப்பட்டது.
இதனையடுத்தே பைடனுக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் அதில் அவருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மீண்டும் நாளை புதன்கிழமையன்று பைடனுக்கு மேலும் ஒரு பீசீஆர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
பைடனுக்கு தற்போது 79 வயதாகிறது. அவரே அமரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட வயதான ஜனாதிபதியாக விளங்குகிறார்.