Tag: Srilanka

விஹாரை அறையில் தேரருடன் காணப்பட்ட தாயையும் மகளையும் தாக்கிய எண்மருக்கு விளக்கமறியல்!

நவகமுவ, பொமிரிய ராஸ்ஸபான பிரதேசத்திலுள்ள விஹாரை ஒன்றின் அறையில் பௌத்த தேரருடன் காணப்பட்டதாகக் கூறப்படும் யுவதி மற்றும் அவரது தாய் ஆகியோரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல பதில்…

சொய்ஸாபுரவில் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

சொய்ஸாபுர பகுதியில் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மொரட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 68 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் அவரது உறவினருடன் வசித்து வந்ததாகவும், நேற்று…

மஹரகம வைத்தியசாலையின் நோயாளிகளுக்கான உலருணவைத் திருடிய இரு சமையல்காரர்கள் கைது!

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் உள்ளக நோயாளிகளுக்கு உணவு தயாரிப்பதற்காக சமையல் அறையில்  வைக்கப்பட்டிருந்த உலர் உணவுப் பொருட்களை திருடிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம மற்றும் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 38, 54 வயதுடைய அதே வைத்தியசாலையின் சமையல்காரர்கள்…

பெண்களுக்கு எதிராக வீடியோ வெளியிடுவோர் மீது நடவடிக்கை

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் பொமிரிய…

ராஜபக்ஷ குடும்பம் அதிகாரத்தை மீண்டும் கையகப்படுத்த முயற்சி – அஜித் பீ 

தேர்தல் அதிகாரத்தில் தாக்கம் செலுத்தும் எந்த சட்டத்திற்கும் 2/3 பெரும்பான்மை தேவையாகும்.மேலும்  இந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லை. நாட்டில் சூழ்ச்சியான அரசியல் ஆரம்பமாகியுள்ளது.  ஜனாதிபதியின் அனுசரனையுடன் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் தமது அதிகாரத்தை கையகப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின்…

விக்டோரியா அணை கசிவு தொடர்பில் ஷஷேந்திர ராஜபக்ஷ விளக்கம்

விக்டோரியா அணையில் விரிசல் மற்றும் அதிர்வு காரணமாக நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் செய்திகள் பொய்யானது என இராஜாங்க அமைச்சர் ஷஷேந்திர ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவின் வாய்மூலக் கேள்விக்கு சபையில் பதிலளித்த இராஜாங்க…

சமாதான நீதவான், விசேட வர்த்தமானி வெளியீடு

பொது நிர்வாக அமைச்சு செயலில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நிரந்தர மற்றும் சுறுசுறுப்பான சேவையில் உள்ள கிராம உத்தியோகத்தர்களை சமாதான நீதவான்களாக நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இரத்த காயங்களுடன் இளைஞர் சடலமாக மீட்பு

மாத்தறையில் இரத்தக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை, திக்கொடை பிரதேசத்தில் இன்று அதிகாலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய கவிந்து பெர்னாண்டோ என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பன்…

க.பொ.த உயர்தர, சாதாரண தர பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள், கல்வி அமைச்சால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் எனவும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை…

வங்கிகளுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் இதன் நன்மைகளை பொது மக்களுக்கு பெற்றுத்தராத வங்கிகள் தொடர்பில் தேவையான ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும்…

SCSDO's eHEALTH

Let's Heal