Description
எளிய தமிழில் Big Data – மின்னூல்
‘Data is the new Oil’ என்பது புதுமொழி. இணைய தளங்கள், கைபேசி செயலிகள் யாவும் தம் பயனரின் அனைத்து செயல்களையும் தகவல்களையும் சேமித்து வருகின்றன. இவ்வாறு சேமிப்பதும், அவற்றில் இருந்து பயனுள்ள தகவல்களை தேடி எடுப்பதும், சில ஆண்டுகளுக்கு முன் சாத்தியமே இல்லை. குறைந்து வரும் வன்பொருள் விலையும், சிறந்த கட்டற்ற மென்பொருட்களும் இணைந்து, பல்லாயிரம் சாத்தியங்களுக்கும், சாதனைகளுக்கும் வழிவகுத்துள்ளன.
Big Data – பெருந்தரவு. இதை Mainframe, Super Computer போன்ற எந்த சிறப்பு கட்டமைப்புகளும் இன்றி, நமது கணினிகள், மடிக்கணினிகள் கொண்டே, Cluster உருவாக்கி, Elasticsearch, Hadoop, Spark போன்ற கட்டற்ற மென்பொருட்களை நிறுவி, கற்கவும், செயல்படுத்தவும் முடியும். இவற்றை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.
தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது. இதில் வெளியான Bigdata பற்றிய கட்டுரைககளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.
தமிழில் கணிணி நுட்பங்களைப் பகிர, ஒரு களமாக உள்ள ‘கணியம்’ தளத்தில், இதுவரை வெளியான எனது மின்னூல்களுக்கு வாசகர்கள் தரும் ஆதரவு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
“தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”
“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்”
என்ற பாரதியின் விருப்பங்களை நிறைவேற்றுவதில், என் பங்களிப்பும் உள்ளது என்பதே, மிகவும் மகிழ்ச்சி.
து. நித்யா
மின்னஞ்சல்: nithyadurai87@gmail.com
வலை பதிவு: nithyashrinivasan.wordpress.com
Reviews
There are no reviews yet.