கல்லறை தேசத்துப் பூக்களாய்….கவிதை!!
எழுதியவர் –தூரா.துளசிதாசன் வேர் முளைத்துவிழுதுகளாக மண்ணில்கரம்பிடித்த எம்சிரசைவெட்டி எடுத்துவிறகாக சாம்பலாக்கினீர்கள் ..நீர்ச்சுனைகளில் மலர்ந்துமணம்வீசினோம் ஆம்பலாக..தடாகத்தின் வயிற்றைகிழித்தெடுத்து எம்மைஅமிலத்தில் அமிழ்த்தினீர்கள்..விடியலின் பிறப்பிற்காககூவினோம் குயிலாக…சிறகை பிய்த்தெறிந்துமென்று சாப்பிட்டுஏப்பமிட்டு வீசினீர்கள்…இதயப் பைகளில்தேசத்தின் நேசக்காற்றைஅடைத்து குருதிமையைபருகிய கரிக்கோல்கள்எம்மை காளானாய்பிடுங்கி யெறிந்தீர்கள்…அதிகார நாற்காலியில்அமர்ந்து அடக்கியேகாலணியால் நசுக்கினாலும்உயிர் மூச்சைபிடித்து இறுத்தி,உயிர்த்தெழுவோம்…