Category: கவிதை

டெய்ரி மில்க்குகளை அடுக்குபவள்- கவிதை!!

எழுதியவர் – இரா.பூபாலன். அவளுக்கு டெய்ரி மில்க்சாக்லேட்டுகள் மீதுகொள்ளைப் ப்ரியம்பிறந்த தினத்துக்கு வரும்பரிசுப் பொருட்களையும் பிரிக்காதுஉதடுகள் கன்னமெல்லாம்மரநிறம் படிந்துகிடக்கமுதலில் உண்டு முடிப்பாள்ஒரு முழு சாக்லேட்டையும்.ஒரு பெட்டி டெய்ரிமில்க் போதும்அவளை வசியமாக்க எனவம்பிழுப்போம் அவளை.பேரங்காடியின்மேலடுக்குகளில் டெய்ரிமில்க்குகளைஅடுக்கிக் கொண்டிருந்தவளைநெடுநாட்களின் பின்னர் சந்தித்தேன்.இழப்புகளின் துரத்தலில்பகுதிநேரப் பணிக்குச்…

நிலா மகள் – கவிதை!!

தூரா.துளசிதாசன் அண்டத்தின்பெருவெளியில் தெறித்தஒரு துண்டு…!இரவின் மடிவில்முஹாரி பாடும்வானத்து குயில்..!சூரியனை கொள்ளைகொண்ட இருளனைஎரித்திடும் ஒளிமகள்…!அந்தகார அருவில்ஆடையின்றி நீராடும்கிளியோபட்ரா…!இருள் நதியில்நீந்திடும்குளிர் தேவதை..!நிலா அவளைஎதிர்பார்க்கும் நாளெல்லாம்கரைகிறது மனம்நினைவெனும்அமிலக் கரைசலால்…நிலவுஅவளை காணாதநாட்களெல்லாம் நகர்கின்றன..அமாவாசை இரவாக..?

முகம் – கவிதை!!

எழுதியவர் – அகன் அவளுக்கென ஒருமுகம்அவனுக்கென ஒருமுகம்உறவுக்கென ஒருமுகம்ஊருக்கென ஒருமுகம்அனைவருக்காகவும்அறுத்துக் கொடுத்ததுபோக..இவனுக்கெனவும்இவளுக்கெனவும்எஞ்சியிருக்கிறதுஇருமுகம்..ஏமாளியெனவும்கோமாளியெனவும்நிரந்தரமானஇருமுகம்.

கவித்துளி!!

எழுதியவர் -ரவி வெய்யிலின் அருமை நிழலில் தெரியும்.மரத்தின் அருமை கொரொனாவில் தெரிகின்றது.( பள்ளி பாடங்களில், மரம் நிழல் தருவதாக கூருவதை நிருத்திவிட்டு, ஆக்சிஜன் தருவதாக புகட்டுங்கள் )

இலக்கு – கவிதை!!

எழுதியவர் – பாவலன் முயன்று பார்முடியாதது எதுவும்இல்லைமுதலில் இலக்கைதெரிவு செய்குறி வைஅசந்திடாதேகவனமாக முன்னேறுஇலக்குஉனக்குஅண்மையில்சோர்ந்து விடாதேகால் ஆற விட்டால்களைத்து விடுவாய்வெற்றியின் பின்போதிய ஓய்வுஎடுத்து கொள்அது வரைஓடிக்கொண்டே இருதூரம் அதிகமில்லைஓடு மீன் ஓடிஉறு மீன் வரும் வரைகாத்திருக்குமாம் கொக்குநீயும் உன் இலக்குஎதுவோ அதுவரைஓடு முடிந்தால்அதையும்…

இலையுதிர் காலம் – கவிதை!!

எழுதியவர் – தூரா.துளசிதாசன் கிழித்துப் போட்டநாட்காட்டி தாள்களில்கப்பல் செய்தாள்சிறுமி ஒருத்தி …கப்பலே கவிழ்ந்ததாய்கன்னத்தில் கைவைத்துகாத்திருந்தாள்பெண்ணொருத்தி…அலைபேசியில் குறுந்தகவல்கண் சிமிட்டியது“கொரனா பரவலால்இலையுதிர்க்காலம் இன்னும்நீடிக்குமென்று…”காணொளி அழைத்தலில்தோன்றி மறைந்ததுகடல் தாண்டிவலசை போனகொண்டவனின் முகம்…அலைக்கற்றை சுவாசம்அலைபேசியில் குறைந்ததால்உயிர்க்கற்றை ஊடுருவிசென்றது ஒரு நிமிடம்உடலைவிட்டு…!

மிச்சமிருக்கும் புல்லாங்குழல்கள் – கவிதை!!

எழுதியவர்- துளசி வேந்தன் கருகிய மூங்கில் காட்டில்,மிச்சமிருக்கும்புல்லாங்குழல்கள்,அழுதுகொண்டுமுகாரிஇசைத்துக்கொண்டிருப்பதில்லை,மீண்டும் துளிர்க்க,மழைத்துளி வேண்டி,அமிர்தவர்ஷினியைமுணுமுணுத்துக்கொண்டிருக்கின்றன

வினையில்லா வீரியம்- கவிதை!!

எழுதியவர் – வளருங்கவி அமுதன் உலகை வெல்லும்பிடிவாத முனைப்பு..சிகரம் ஏறிடவேசீரான வேகம்..கூரான பார்வையில்குறிவைத்த இலக்கு..மாற்றுத் திறனிருக்கமருகாத மனோபாவம்..மிருகமாக விடாதுமிரட்சியான பயிற்சியே..இலகுவாகும் இமயமும்உரங்களிட்டு உழைத்திடு..வரங்கள் இங்குகிடைப்பது அரிதே..நிறங்கள் பார்க்கும்நீதிகளே உண்டு..கண்டும் காணாதுகாரியத்தில் நீயிறங்கு..களம் முந்திடபிந்திய கூட்டமிங்கு..

உலக புத்தகதினம் -கவிதை!!

எழுதியவர் – பொள்ளாச்சிமுருகானந்தம். இரவின் நீளத்திற்குஒரு புத்தகம் கொடுத்தாய்…….ஆனால்உன் உத்தரவில்வாசித்தலை விட….பார்க்கச் சொல்லி கட்டளையிட்டிருக்கிறாய்……பகல்முழுக்கநீயோ நானோகொடுத்தோ வாங்கியோ கொள்கிறஏராளமானஎன்னவோக்கள்அந்த புத்தகத்தில்அழகாய் பூத்துக் கிடக்கிறது…….அந்த நீளத்திற்கு-நள்ளிரவோமுன்னிரவோ பின்னிரவோ……எதும் தெரியாது…….எல்லா இரவிலும்புத்தகம் வெகு இயல்பாய்புரளும்……..இரவையும்புத்தகத்தையும்உயிர்த்தலோடு-நகர்த்த ………உன் தேவதைத்தனம் தருகிறகுட்டியூன்டு தேநீர்அந்த இரவின் நீளத்தைகடந்து சென்று…

SCSDO's eHEALTH

Let's Heal