Category: கவிதை

ஒற்றைப்புள்ளி – கவிதை!!

எழுதியவர் – கார்த்திகேயன். தோசை சுட்டது,புரோட்டா போட்டது……களை பறித்தது,நாத்து நட்டது……….தறி நெய்தது,தயிர் வடை சாப்பிட்டது……..டீ ஆற்றியது,டேபிள் துடைத்தது……ஆட்டோ ஓட்டியது,அடிக்கடி தனக்குதானேசிரித்துக் கொண்டது……..ஆகா, அத்தனைக்கும்விழுந்தது பார்முற்றுப்புள்ளி…………அதுமட்டுமா உங்கள் கைவிரலில் பாருங்கள்அங்கேயும் ஒரு புள்ளி……அதுவே உங்கள்வாழ்வில் துவங்கப்போகும்விடியலின்முதல் புள்ளி. # கார்த்திகேயன்.

பழக்கம் – கவிதை!!

ஒருவரின் புறக்கணிப்பையும், விலகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்சகித்து வாழ பழகிக் கொள்ளுங்கள்.புறக்கணிப்பும், விலகுதலும் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துளி உயிரிலும் வியாபித்து கிடக்கிறது.எனக்கு வேண்டாம் என்று மனிதன் அதை ஒருபோதும்புறந்தள்ள முடியாது.மலரில் தேன் உண்ணும் பூச்சிகள் எத்தனை என்றுபலருக்கும் தெரியாதுஅதுமலருக்கும் தெரியாதுபூச்சிகளுக்கும் தெரியாது.ஒரு செடியில்…

புதிய வரலாறு- கவிதை!!

எழுதியவர் –#கவிஞர்_கோபிகிருஷ்ணா மன்னனை மன்னன்அழித்து அழித்துஎழுதப்பட்ட வீர வரலாறு இங்கே நூறு!இன்னொருவரின் இன்னுயிர் எடுக்காதுஅவன் வம்சத்தை அழிக்காதுகாத்த வீர மன்னன் இங்கே யாரு!மக்களை காத்து,மண்ணை காக்கும்மன்னன் ஒருவன் இருக்கையில்,அம்மன்னனின் தலை கொய்துஅந்நாட்டை கைப்பற்றிமற்றொரு மன்னன் ஆள்வதைஅபகரிப்பு என்று கூறாதுவீரம் என்று எழுதியதாரு!கற்கால…

என் காதல் – கவிதை!!

எழுதியவர் –Kamali Teps காதல் மரணித்து விடுகிறதுஉரிமை கோரும்உறவுகளாகும் போது…நல்லது கண்ணம்மாநான் காதலித்துக் கொண்டேஇருந்து விடுகிறேன்…இருப்பவைகளின் பாரங்களை விடஇல்லாதவைகள் மீதான ஏக்கம்இணையற்ற சுகமானது…நான் சுகமானசுகத்துடன் இருந்து விடுகிறேன்.உன்னை சந்திக்காமலே….காதல் ஏற்றுக் கொள்ளப் படும்போதுமுடமாகிப் போகிறது…..சோக வரிகள் வறண்டு போகிறது….எனது காதல்ஆயிரம் கண்ணம்மாக்களுடன்சிறகடித்துப்…

நேரம் – கவிதை!!

எழுதியவர் – கவிதா முகுந்தன். இறக்கைகட்டிப் பறக்கும் நேரத்தைஇழக்க விருப்பமின்றிமணிக்கூட்டைஎடுத்து மூடிவைக்கிறேன்மர அலுமாரிக்குள்..நேரம்பொன்னானது எனநேரமின்றி முணுமுணுத்தபடிவைரவளையல்களைவரிசையாய் துடைத்துவகைபிரித்துஇரும்புப்பெட்டிக்குள்அடுக்கிவைக்கிறாள்என் அம்மா..நேரம்போவதே தெரியவில்லைஎன்று நேரத்தைமீண்டும் மீண்டும் பார்க்கிறார் தொலைபேசியில்தொடுவானம் தேடும்என் தந்தை..நேரத்திற்கும் தனக்கும்என்ன சம்பந்தம் என்றே தெரியாமல்இணையத்துள்புதைந்து கிடக்கிறான்என்தம்பி..நேரமாகியும் உணவுவரவில்லை என்றுவாலைக்குழைத்தபடிவாசலையேபார்த்துக்கொண்டிருக்கிறதுஒரு வாயற்ற ஜீவன்..அப்போது…நேரமோ…வெகுநேரமாகி…

மனிதம் – கவிதை!!

எழுதியவர் – கா.ரஹ்மத்துல்லாஹ்… யாருன்னே தெரியாதவங்களுக்காகஎப்பவாச்சும் கண்கலங்கி அழுதிருக்கீங்களா?முகம் தெரியாத மனிதருக்கும்நாமும் உதவனும்னு நினைச்சிருக்கீங்களா?அறிமுகம் இல்லாத போதும்அவசரத்தேவை உள்ள ஒருத்தருக்குஉதவி செஞ்சிருக்கீங்களா?மனசாரச் சொல்றேன் நீங்களும்போற்றப்பட வேண்டியவர்களே…இதற்கான திருப்திங்கறது உங்க மனசுக்குமட்டும்தான் தெரியும்.விலாவாரியாகச் சொன்னாக் கூடகேட்கறவங்களுக்கு வெறும் செய்தி.ரத்தமும் சதையுமா உணர்ந்தது நீங்க…

நோன்பை ஏற்போம்- கவிதை!!

எழுதியவர் – எம்.வஸீர். வாழைத்தோட்டம் சென்ற நோன்பின் சூடுசீறாய் ஆற வில்லைவென்று கொள்க வென்றுவருது நோன்பு எம்மை!இரக்க முள்ள நாயன்இறக்கி வைக்கின் றானேசிறக்க வேண்டும் மனிதன்சிறப்பு நோன்பி னாலே!ரமழான் மாதம் போலரம்ய மாதம் இல்லைஅமல்க ளுக்கு என்றுஅதிக மதிக நன்மை!குறைந்த ஆயுள்…

புகைவண்டி – கவிதை!!

எழுதியவர் – டினோஜா நவரத்னராஜா நெடு நீண்ட பாதை நடுவேமெது மெதுவாய் நீல நாகம்…வெளியை புகை கக்கஉள்ளே விழுங்கிக்கொண்டபட்டுப்புழுக்களின் கருந்தலைகள்கொஞ்சம் கொஞ்சமாகவழிநெடுகும் வெளி நீட்டஎத்தனிக்கும்…கண்ணாடி மென் செதில்கள்மெல்ல வழிவிட்டுயரபரந்த வெளிகளைபருகும் தலைகளெல்லாம்கடகட சத்தத்தோடுகாற்றினை கட்டியணைக்கும்…வா வாவென்றழைக்கும்ஓரத்து கதவுகள் கண் சிமிட்டஅடடா என…

இயற்கை மடியில்-கவிதை!!

இயற்கை மடியிலே அழகு கொட்டிக் கிடக்கிறதுஇரு விழிகளும் அடங்காமல் திரைப்படமாகிறதுஇம்மியளவும் பிசகாமல் கனவிலே மிதக்கிறதுஇரத்தம் சுற்றும் போதே மூளை அதைருசிக்கிறதுவியந்து பார்க்கும் விழிகளில் ஓராயிரம் கனவுவிடுமுறையில் வந்து விளையாடும் அந்தவுறவுவிருந்துண்ணும் சாட்டிலே கிளிகளின் மகிழ்வுவீதியெங்கும் தோரணங்கள் ஆடும் வண்ணவடிவுஅடுக்கடுக்கு மாளிகைகள் அழகான…

கீறல் விழுந்த நாட்கள்…..கவிதை!!

உழவு செய்ய தெரிந்தவனுக்குஊழல் செய்ய தெரியாததாலோ என்னவோஇன்னமும் வயிற்றில்வறுமை எனும் கீறலோடுசுற்றித் திரிகின்றான்சிலைவையென கலப்பையை சுமந்துக்கொண்டு…சிற்பங்கள் அழிந்துவிட்டால்கோவிலுக்கு சிறப்பில்லைசிற்பிகளே அழிந்துவிட்டால்கோவிலுக்கு பிறப்பென்பதே இல்லை…விவசாயம் அழிந்துவிட்டால்உண்ணும் உணவிற்கு வழியில்லைவிவசாயிகள் அழிந்துவிட்டால்பின் வருந்தி பயனில்லை…எத்தொழிலிலும் போலிகளுண்டுவிவசாயம் ஒன்றை தவிர…காட்டில் வேலை செய்பவன் கேவலமாகவும்கணினியில் வேலை…

SCSDO's eHEALTH

Let's Heal