ஐரோப்பிய நாடுகளில் நேரமாற்றம்!!
இன்று 28.03.2021 ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் நேர மாற்றம் அமுலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று 28.03.2021 ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் நேர மாற்றம் அமுலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மியன்மாரில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்ட கடந்த பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து தற்போதுவரை கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. இன்றும் பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இன்று (சனிக்கிழமை) ஒரேநாளில் 90 இற்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.…
புனே மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்தியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்யதுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி,…
இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி மத்திய எகிப்தில் ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாக எகிப்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சோஹாக் மாகாணத்தின் தஹ்தா மாவட்டத்தில் தலைநகர் கெய்ரோவிலிருந்து தெற்கே 460 கிலோமீற்றர் (285 மைல்) தொலைவில் இந்த விபத்து…
மனித விண்வெளிப் பயணத் திட்டம் உட்பட பல களங்களில் இருதரப்பும் இணைந்து செயற்பட்டு வரும் நிலையில், இந்தியாவும் பிரான்ஸும் தங்களது மூன்றாவது கூட்டு செயற்கைக்கோள் பணியில் ஈடுபட்டுள்ளன என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
எவர்கிரவுண் என்ற வணிக கப்பல், உலகின் முக்கிய வணிகப்பதையான சுயஸ் கால்வாயில் சிக்கியுள்ளதால் அப்பாதையூடான சகல கப்பல் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் விபத்தினால் கால்வாயின் தென்பகுதியில் சரக்கு கப்பல்கள் குவிந்து வருகின்றன. இவ்விபத்தானது உலக வர்த்தகத்தைப் பாதிக்கலாம் என நிபுணர்கள்…
சென் ஃபிரான்சிஸ்கோ நகரிலுள்ள BetterUp என்ற மனநல நிறுவனத்தின் உத்திகளுக்கான வழிகாட்டி அதிகாரியாக பிரித்தானிய இளவரசர் ஹரி இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊழியர்களுக்கான பயிற்சி மற்றும் மனநல ஆதரவு உள்ளிட்ட சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
ஈஸ்டர் விடுமுறையை நிறுத்தி கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக மூன்று வாரங்கள் நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை ஜேர்மனி அறிவித்துள்ளது. பிராந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அதிபர் அங்கலா மேர்க்கெல் குறித்த இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்தவகையில் ஏப்ரல் முதலாம்…
வார இறுதியில் ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்காவிக் அருகே ஃபக்ரடால்ஸ்ஜால் என்ற எரிமலை வெடித்ததையடுத்து அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். 800 ஆண்டுகளில் முதல் தடவையான எரிமலை வெடிப்பு இதுவாகும். ஆயிரக்கணக்கான நில அதிர்வுகளுடன் வெடித்துள்ள எரிமலையிலிருந்து லாவா எனப்படும்…