Category: உலகச்செய்திகள்

நோர்வேயில் பெருகும் கொரோனா பாதிப்பு!!

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நோர்வேயில் ஒரு இலட்சத்து ஆயிரத்து 82பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 88ஆவது நாடாக விளங்கும் நோர்வேயில் இதுவரை 683பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து…

தொடர்ந்தும் ஐரோப்பாவை அச்சுறுத்தும் கொரோனா!!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 48 இலட்சத்து 41 ஆயிரத்து 308 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 08 ஆயிரத்து 45 பேர்…

வயது வந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – ஜோ பைடன் அறிவிப்பு!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதிக்குள் 18 வயது பூர்த்தியான அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ…

பொதுமுடக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்களாதேஷில் மூவர் மீது துப்பாக்கி சூடு!

பங்களாதேஷில் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொதுமுடக்கத்துக்கு எதிராக, முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் மூவர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பங்களாதேஷில் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொதுமுடக்கத்துக்கு எதிராக, நேற்று (திங்கட்கிழமை) பிற்பகுதியில் ஃபரித்பூர் மாவட்டத்தின் மத்திய நகரமான சால்தாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சிறு…

கனடாவில் ஒரு நாளில் 10,386பேர் பாதிப்பு!!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பத்தாயிரத்து 386பேர் பாதிக்கப்பட்டதோடு 56பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து இலட்சத்து 14ஆயிரத்து 374பேர் பெருந்…

புளோறிடாவில் அவசர நிலை பிரகடனம்!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பா நகரில் கழிவுநீர் தேக்கத்தில் கலந்த நச்சு நீர் வெள்ளமாக ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் குறித்த மாகணத்தில் அவசர நிலையை அறிவித்து ஆளுநர் ரான் டிசாண்டிஸ் உத்தரவிட்டுள்ளார். அத்தோடு, தம்பா நகரில் வசிக்கும் 300இற்கும் மேற்பட்ட…

வாரத்திற்கு இரண்டு முறை இங்கிலாந்தில் கொவிட் சோதனை இலவசம்!

இங்கிலாந்தில் உள்ள மக்கள் அனைவரும் வாரத்திற்கு இரண்டு முறை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலவசமாகப் பரிசோதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இலவசமாக விரைவுச் சோதனை செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் பாடசாலைகள் மற்றும் பணியிடங்களில் அனைவருக்கும் ராபிட் விரைவுச்…

வஜோசா ஒஸ்மானி கொசோவோவின் புதிய ஜனாதிபதியாக தெரிவானார்!

தெற்கு ஐரோப்பிய நாடான கொசோவோவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான புதிய ஜனாதிபதியாக 38 வயதான வஜோசா ஒஸ்மானி (Vjosa Osmani) தெரிவு செய்யப்பட்டுள்ளார். போருக்குப் பிந்தைய காலத்தில் நாட்டின் ஏழாவது மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதியாக இவர் தெரிவாகியுள்ளார். இரண்டு நாட்கள்…

பெருவில் 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்!

15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பெருவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெருவில் 15இலட்சத்து 582பேர் பூரண குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 17ஆவது நாடாக விளங்கும் பெருவில், இதுவரை 15இலட்சத்து 82ஆயிரத்து…

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக ஈஸ்டர் முட்டை போராட்டம்!

மியன்மார் நாட்டு மக்களால் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் முட்டை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு பல்வேறு வழிமுறைகளில் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேற்கத்திய நாடுகளில் ஈஸ்டர் என்றாலே வண்ணமயமான ஈஸ்டர் முட்டைகள்தான் மிகப்பிரபலமாகக்…

SCSDO's eHEALTH

Let's Heal