Category: உலகச்செய்திகள்

கனடாவில் பெருகும் கொரோனா தொற்று!!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஒன்பதாயிரத்து 255பேர் பாதிக்கப்பட்டதோடு 40பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து இலட்சத்து 45ஆயிரத்து 278பேர் பெருந்…

புகலிடம் கோரி அவஸ்தையான சூழலில் வாழும் தென்சூடான் மக்கள்!!

தெற்கு சூடானில் இருந்து ஆயிரக்கணக்கான புகலிடம் கோருவோர் எத்தியோப்பியாவின் மேற்கு காம்பெல்லா பிராந்தியத்தில் பல மாதங்களாக பயங்கரமான நிலையில் சிக்கித் தவிக்கின்றனர் என்று மருத்துவ தொண்டு நிறுவனமான எம்.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது. தெற்கு சூடானியர்களுக்கு உணவு உதவி உள்ளிட்ட முக்கியமான சேவைகளுக்கான அணுகல்…

99 வயதில் பிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரும் இளவரசருமான பிலிப், தனது 99 வயதில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. 65 ஆண்டுகாலங்கள் சேவையாற்றிய இளவரசர் பிலிப் இன்று (வெள்ளிக்கிழமை) காலை விண்ட்சர் கோட்டையில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடின்பர்க்…

கொவிட்-19 – ஹங்கேரியில் பாதிப்பு ஏழு இலட்சத்தை நெருங்குகிறது!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஹங்கேரியில் ஏழு இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் மொத்தமாக ஆறு இலட்சத்து 98ஆயிரத்து 490பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 32ஆவது நாடாக விளங்கும்…

அமெரிக்கா கருங்கடலுக்கு போர்க் கப்பல்களை அனுப்புகிறது!

உக்ரேனுக்கு ஆதரவளிக்கும் ஒரு திட்டமாக, அடுத்த சில வாரங்களில் கருங்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்புவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகின்றது.இந்த விடயம் ரஷ்யாவிற்கு ஒரு நேரடி செய்தியாக இருக்கும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1936ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் கருங்கடலுக்குள் நுழைவதற்கான…

சீனாவுக்கு தைவான் விடுத்துள்ள எச்சரிக்கை!

தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் போர் விமானங்களை பறக்கவிட்ட சீனாவின் செயற்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவிக்கையில், தேவைப்பட்டால் போரில் ஈடுபட்டு கடைசி நாள் வரை போராடுவோம் என சீனாவுக்கு தைவான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப்…

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,030பேர் பாதிப்பு!!

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், மூவாயிரத்து 030பேர் பாதிக்கப்பட்டதோடு 53பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 43இலட்சத்து 70ஆயிரத்து 321பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 26ஆயிரத்து 980பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை…

கொரோனா பாதிப்பு -உலகளவில் 29இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இறப்பு!!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உலகளவில் மொத்தமாக 29இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். , 13கோடியே 36இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்போதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, மொத்தமாக வைரஸ் தொற்றிலிருந்து 10கோடியே 78இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட முதல்…

வைரஸ் பாதிப்பு இல்லை-வட கொரியா!!

தமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என வடகொரியா உலக சுகாதார ஸ்தாபனத்திடம் அறிக்கையொன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் வடகொரியாவுக்கான பிரதிநிதி எட்வின் சால்வடார் கூறுகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி…

அணுசக்தி ஒப்பந்தத்தை மீள அமுலாக்கும் பேச்சுவார்த்தை

ஈரானும் முக்கிய உலக வல்லரசு நாடுகளும் 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தத்தை மீள அமுல்படுத்துவது குறித்து ஆஸ்திரியாவின் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தை ஈரான், பிரித்தானியா, சீனா, ரஷ்யா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் நடைபெற்றது. அமெரிக்காவின்…

SCSDO's eHEALTH

Let's Heal