×

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையதளத்திற்குச் சென்று அடையாள அட்டை எண்ணை உள்ளிடுவதன் மூலம் வரி செலுத்துவோர் அடையாள எண் உள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) வழங்கப்பட்டுள்ளது. சுமார் 5 மில்லியன் மக்கள் வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பெறுவதற்காகக் காத்திருக்கின்றனர்.

இருப்பினும், உள்நாட்டு வருவாய் திணைக்களம் உரிய நபர்களுக்கு தபால் மூலம் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை அனுப்பாததால், தங்களுக்கு வரி செலுத்துவோர் அடையாள எண் உள்ளதா என்பது பலருக்குத் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115